மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(லியோன்)

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக  நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு   நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இந்த செயல் திட்டம் பாடசாலை மட்டத்திலும்  மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு  நடவடிக்கையாக  மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் .

இதற்கு அமைய பாடசாலை வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத மலசல கூடத் தொகுதிகளை அகற்றல் ,

உடைந்துள்ள பொருட்களை பொருத்தமானவாறு முகாமைத்துவப்படுத்தல் ,
பாதியளவு முடிக்கப்பட்டுள்ள கொங்ரீட் கூரைகளில் நீர் தேங்கி நிற்காதவாறு திருத்துதல் ,

மலசல கூடங்கள் அண்மித்த நுளம்பு பெருகக்கூடிய இடங்களைச் சீர் செய்தல் .

பாடசாலைச் சூழலிலுள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்கள் உரிய முறையில் முகாமைத்துவப்படுத்தல் ,

மழைப் பீலிகளைச் சுத்தம் செய்வதுடன் அபாயமுள்ள மழைப் பீலிகளை அகற்றல் போன்றவற்றை  நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை பிரதி உதவிக் கல்விப் பணிப்பாளர் தா .யுவராஜாவின் மேற்பார்வையின் கீழ் பாடசாலை அதிபர் கே .ஸ்ரீதரன் தலைமையில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன    .


இந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில்  பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள்,  மாணவர்களை கலந்துகொண்டனர்