ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலைய விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்களமும் மற்றும் முப்படையினரும் இணைந்து நிர்மாணிக்கப்படவுள்ள விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (27) நடைபெற்றது .


மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலைய வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்களமும் மற்றும் முப்படையினரும் இணைந்து08 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர தலைமையில்   நடைபெற்றது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலைய விகாராதிபதி பட்ட பொல குனானந்த நாயக சுளுவீர ஹிமி மற்றும் மாவட்ட பொலிஸ் திணைக்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் , முப்படையினர்கள் ,சிவில் அமைப்பின் பிரதிநிதிகள்  கலந்துகொண்டனர்