கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி

(லியோன்)

இந்துக்களின் மிகவும் பிரசித்திபெற்ற தினங்களில் ஒன்றான ஆடிப்பூர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெறுகின்றன

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில்   விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.


ஆடிப்பூரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி நடைபெற்றது.


இந்துக்களின் கலாசார நிகழ்வுகளுடன் மேளதாளங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் பால்குடங்களை ஏந்திவர இந்த பாற்குட பவனி நடைபெற்றது.

பால்குட பவனியானது  மட்டக்களப்பு நகர் ஊடாக  வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான  வீதி  வழியாக ஆலயத்தினை  வந்தடைந்தது ,

இதனை தொடர்ந்து   அடியார்கள் கொண்டுவந்த  பால்  அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன்  ஆலயத்தில் விசேட பூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.