(மண்டூர் நிருபர்)மண்டூர் விஷ்ணு விளையாட்டுக் கழகத்தின் 23வது ஆண்டு நிறைவிழா அதன் தலைவர் க.முகுந்தன் தலைமையில் விஷ்ணு விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று(02.07.2017) பி.ப 2.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளாக அதிதிகள் உரை இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான விளையாட்டுக்கள்,கடந்த வாரங்களாக இடம்பெற்ற கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும்,புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த(சா/த)பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சி.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக வெல்லாவெளி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபியூ.பி.ரசிக சம்பத் அவர்களும் டாக்டர் என்.பிரேமதாசன்,டாக்டர் ஏ.சிறிதரன்,கி.சே.உத்தியோகத்தர் பா.சிவலிங்கம், பாடசாலை அதிபர்கள்,மதகுருமார்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,விளையாட்டுக்கழக உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 |
Add caption |
 |
Add caption |
 |
Add caption |
 |
Add caption |
 |
Add caption |