புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயன காகிதத்ததால் அச்சிடப்பட்டுள்ளன.

(மண்டூர் நிருபர்) பாடசாலைகளில் ஏழாம் தர மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயன காகிதத்தால் அச்சிடப்பட்டுள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கெ தெரிவித்துள்ளார்.

தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது பாடசாலைகளில் தரம் ஏழு மாணவர்களுக்காக வழங்கப்பட்டிருக்கும் புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயன காகிதத்ததால் அச்சிடப்பட்டுள்ளன. இந்த காகிதத்தை கொண்ட புத்தகங்கள் மாணவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.
இந்த விஷ இரசாயன காகிதங்களை கொண்ட புத்தகங்களுக்காக அரசாங்கத்தால் 15 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கான அமைச்சரவை பத்திரம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் பரிசோதிக்கப்பட்டதுடன், அதில் குறித்த புத்தகங்களால் சுற்றாடல் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் என தேசிய திட்டமிடல் திணைக்களம் ஆய்வு முடிவினை வெளியிட்டது.
இருப்பினும் ஆய்வு முடிவிற்கான அறிக்கை அமைச்சரவை பத்திரிகையுடன் சமர்பிக்கப்படவில்லை. இதனால் அச்சிடப்பட்ட ஐந்து இலட்சம் புத்தகங்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

அந்த விஷ காகிதத்தில் அசற்றோபினோன், பென்சலிடிகயிட், பென்சயில் அற்ககோல், பென்சோபினோன் போன்ற இரசாயனங்க சேர்க்கப்பட்டுள்ளதன் காரணமாக மாணவர்களின் கண் பார்வைக்கு தீங்கேற்படுத்துவதோடு, உடல் நல ஆரோக்கியத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றோம்.

அத்துடன் விநியோகிக்கப்பட்டுள்ள புத்தகங்களை மீளப்பெறுனவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.