ஆலய வண்ணக்கர்களாக தியாகராஜா விக்கிரமன் மற்றும் .உதயகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

(லியோன்)

கிழக்கிலங்கையில் பிரசித்திப்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்திற்கு வண்ணக்கர்களாக தியாகராஜா விக்கிரமன்  மற்றும் டி .உதயகுமார் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்


மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்திற்கு வண்ணக்கர்களாக  தெரிவு செய்வதற்கான  வாக்கெடுப்புக்கள் இன்று நடைபெற்றது

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்திற்கு குருகுல வம்சம் மற்றும் வேளாளர்குல வம்சம் ஆகிய இரு வம்சங்களிலிருந்து  வண்ணக்கர் ,உதவி வண்ணக்கர் பதவிகளுக்கு  தெரிவு செய்யும்  வாக்கெடுப்பு தேர்தலானது  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே குணநாதன்  தலைமையில் ஆலய அன்னதான சபை மண்டபத்தில் இன்று (17) சனிக்கிழமை  நடைபெற்றது  


இந்த தேர்தலில் அமிர்தகழி ,புன்னைச்சோலை ,மட்டிக்கழி ,பாலமீன்மடு ,நாவலடி ,கருவப்பங்கேணி ,சின்ன ஊறணி  ஆகிய கிராம  குருகுல மற்றும் வேளாளர்குல வம்ச  மக்களின் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படுவர்.

காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற்ற தேர்தலின் வாக்கு பதிவுகளின் முடிவுகள் .  மாலை 04.00 மணிக்கு  அளவில் அறிவிக்கப்பட்டன

தேர்தல் டாப்பில் பதிவு செய்யப்பட  1258   வாக்குகளில்   நடைபெற்ற வண்ணக்கர் தேர்தலில்  960  வாக்குகளே பதிவு செய்யப்பட்டன . இதில் 49 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு    911  வாக்குகளே செல்லுபடியானது . 
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய 2017 ஆம் ஆண்டுக்கான   வண்ணக்கர்கள் தெரிவு  தேர்தலில் போட்டியிடவர்களில்  தியாகராஜா விக்கிரமன் அதிகூடிய வாக்குகளை பெற்று வண்ணக்கராகவும் ,  உதவி வண்ணக்கராக  டி .உதயகுமார் ஆகிய இருவரும் ஆலய பரிபாலனத்திற்கு வண்ணக்கர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்


இந்த தேர்தல் முறைமையானது 1978 ஆண்டு முதல் நீதிமன்ற  சட்ட   தீர்ப்பு  அமைய  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்முனை வடக்கு  பிரதேச செயலக மேற்பார்வையின் கீழ் இந்த தேர்தல் நடைபெற்று வருகின்றமை  குறிப்பிடத்தக்கது .