கல்லடி முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பாற்குட பவனியும் 1008 சங்காபிசேகமும்

(லியோன்)

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம்  அருள்மிகு  ஸ்ரீ  முத்துமாரியம்மன்  ஆலய கும்பாபிஷேக  தினத்தை சிறப்பிக்கும்  மாபெரும் பாற்குட பவணி நடைபெற்றது  


மட்டு- நகரில் சிறப்பு மிக்க ஆலயமாக விளங்கும்  மட்டக்களப்பு  கல்லடி முகத்துவாரம்  அருள்மிகு  ஸ்ரீ   முத்துமாரியம்மன்  ஆலய  மகா கும்பாபிஷேக   தினத்தை தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று இறுதி நாளான இன்று மாபெரும் பாற்குட பவனியும் 1008 சங்காபிசேகமும்  ஆலய பிரதம குரு –  சிவஸ்ரீ நித்திய சிவானந்த சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு  ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார்  ஆலயத்தில் இருந்து மாபெரும் பால் குட பவனி  ஆரம்பமானது .

பால்குட பவனியானது  மட்டக்களப்பு நகர் ஊடாக பிரதான கல்முனை வழியாக ஆலயத்தினை  வந்தடைந்தது , இதனை தொடர்ந்து அடியார்கள் கொண்டுவந்த  பால் மூலமூர்த்தியாகிய  அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட  யாக  பூஜையும் 1008 சங்காபிஷேக விசேட பூஜை நடைபெற்று தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய    அம்மனுக்கு  அபிசேகம் செய்யப்பட்டது.

இந்த உற்சவ பெருவிழாவில்  பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்