தமிழ் மக்களுக்கு தலைமைதாங்க தமிழரசுக்கட்சிக்கு தகுதியில்லையென நிரூபித்துள்ள –ரி.எம்.வி.எபி. பொதுச்செயலாளர்

கிழக்கு மாகாண சபையினை தமிழனிடமிருந்து பறித்து துரோகம் செய்த தமிழரசுக்கட்சி வடக்கு மாகாணசபையினையும் சீரழித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கும் தகுதி தமக்கு இல்லையென்பதனை நிருபித்துக்காட்டியுள்ளது. என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டாh.
 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பாக உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடத்தேர்வுசெய்யப்படும் கிராம மட்ட தலைவர்களுக்கான கூட்டம் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று நடைபெற்றபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் அங்கு குறிப்பிடுகைளில்,

தமிழரசு கட்சியானது வடமாகாண சபையை வெற்றிகரமாக நடத்துவதில் கண்டுள்ள தோல்வியானது பாரதூரமானதாகும். போருக்கு பின்னரான மக்களது வாழ்வில் முறையான புனர்வாழ்வு பணிகளைக்கூட செய்யமுடியாத நிலையில்  யுத்த காலங்களில் தமிழ் சமுகம் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வந்தது. அத் துயரங்கள் மாறவில்லை. கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை வசதிகள் தீர்க்கப்படவில்லை. குடிநீர் இன்றி குடியிருப்பு இன்றி சரியான போக்குவரத்து வசதிகள் இன்றிஇ வாழ்வாதாரம் இன்றி பல இன்னல்களுக்கு தமிழ் சமுகம் தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றது.

காணாமலாக்கப்பட்டவர்களின்  உறவுகளின் போராட்டம் தொடர்கின்றது பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கின்றது யுத்தத்தில் அங்கவீனர்களாக்கப்பட்ட தமிழ்சமூகம் வாழ்வுக்காக தினம்தினம் போராடிவரும் நிலையில் அவர்களின் துயர் துடைப்பதாத சூழுரைத்த தமிழரசுகட்சியின் நிர்வாக திறனின்மை சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளளது. ஊழலிலும்  பதவிச் சண்டையிலும் நாடு முழுக்க செய்தியில் இடம்பிடித்திருக்கின்றது வடக்கு மாகாண சபை.  இதனுடாக தமது செயல் திறனை மட்டுமல்லாது  ஒழுக்கமின்மையையும் ஒப்புக்கொண்டுள்ளது தமிழரசுக்கட்சி.

மக்களது போராட்ட பாதையில் வந்தவர்களை துரோகிகளாக்கி படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் மட்டுமே தலைமைக்கு தகுதியானவர்கள் என்று  சொல்லிவரும் தமிழரசுகட்சியினரின் ஏமாற்று வித்தை இன்று அம்பலப்பட்டு நிற்கின்றது.

தமிழ் மக்களுக்காக போராடாதவர்களும் மக்களோடு வாழாதவர்களும் எங்கிருந்தோ வந்து தலைவர்கள் ஆக்கப்பட்டதன்  விளைவை இன்று வட மாகாண சபை அனுபவிக்க நேரிட்டுள்ளது.

தமிழரசு கட்சியே பிள்ளையான் படித்தவனா பட்டம் பெற்றவனா என்று அன்று கேள்வியெழுப்பினீர்களே? அந்த பிள்ளையான் கிழக்குமாகாணசபையில் செய்துகாட்டிய பணிகளில் பத்தில் ஒன்றைக்கூட உங்களால் செய்ய முடிந்ததா
பிள்ளையானிடமிருந்த வினைத்திறன் மிக்க ஊழலற்ற ஆட்சி உங்களிடமில்லாமல் போனதேன்

எங்கள்  மண்ணின் மைந்தர்களை துரோகி என்று தூற்றினீர்களே இன்று யார் துரோகிகள் என்று உங்களிடம் கேள்வியெழுப்புகின்றோம்? மக்கள் பணத்தை கொள்ளையடித்து விசாரணை கமிஷன்இ இராஜினாமாஇபதவி பறிப்புஇநம்பிக்கையில்லா பிரேரணை என்று எத்தனையோ முறைகேடுகள் வடக்கு மாகாணசபையில் தலைவிரித்தாடுகின்றது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை சிறிதேனும் பூர்த்தி செய்வதற்காகவே இந்திய அரசாங்கத்தால் மாகாணசபை முறை உருவாக்கப்பட்டது. இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இரத்தம் சிந்தியதன் விழைவாகக்கிடைத்;த மாகாணசபையினைக்கூட நடத்த முடியாமல் சீரழித்து விட்டீர்களே இதனை தொடர்ந்தும் தமிழ்மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்