புனித மிக்கேல் தேசிய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய  பாடசாலை  மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு (21) புதன்கிழமை  நடைபெற்றது.


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா  தலைமையில் பாடசாலை பிரதான அரங்கில் நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக  மாணவர்களினால் அதிதிகளுக்கு  மலர்மாலை அணிவித்து பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு பாடசாலை அழைத்து வரப்பட்டனர்  இதனை தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு பிரதான நிகழ்வுகள்  ஆரம்பமானது  

இதனை தொடர்ந்து நிகழ்வுகளில் கலந்துகொண்ட விருந்தினர்களின் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன் , தொடர்ந்து மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன்  அதிதிகளினால் மாணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .

இதனுடன் இணைந்ததாக பாடசாலை பழைய மாணவர்களினால் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் அதிதிகளாக  கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் , பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா , ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி  மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி எ .சுகுமாரன் , இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி என் . வள்ளிநாயகம் ,இந்திய தொழில் அதிபரும் உலக தமிழ் சங்க தலைவருமான  வி .ஜி . சந்தோசம் ஆகியோருடன் 30  மேற்பட்ட கல்வி மான்கள் ,கல்வி அறிஞர்கள்  மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள், ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்

இதேவேளை இந்நிகழ்வில்  விருந்தினராக  கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் உரையாற்றும் போது தெரிவிக்கையில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால்  நிதி வழங்கப்பட்டு வருகின்றன.


இதற்கு அமைய மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையினை புனர்நிர்மாணம்  செய்வதற்கு கல்வி அமைச்சினால்  67  மில்லியன் ரூபா நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலைக்கு  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது .