புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கலியாணக்கால் வெட்டும் சடங்கு

(லியோன்)

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கலியாணக்கால் வெட்டும் சடங்கு நேற்று  மாலை சிறப்பாக நடைபெற்றது.


கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 18ஆம் ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு  திறத்தல்  உற்சவத்துடன்  பெருவிழா ஆரம்பமாகி எதிர்வரும்  23.06.2017 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெறவுள்ளது ..

ஆலய வருடாந்த உற்சவத்தின் நேற்று  மாலை அடியார்கள் புடை சூழ அம்மன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.


அமிர்தகழி கிராமத்தில் வீட்டு வளாகத்தில் உள்ள பூவரச  மரத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் புடை சூழ இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .

அதனைத்தொடர்ந்து வெட்டப்பட்ட கலியாணக்கால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா கொண்டுசெல்லப்பட்டு ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது


இந்த பெருவிழா நிகழ்வில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்