கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கையெழுத்து போராட்டம்

(லியோன்)

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஐந்து அம்ச கோரிக்கை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தின் 08வது  நாளாகிய இன்று மட்டக்களப்பு நகரில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் 
மாணவர்கள் ஈடுபட்டனர்
கிழக்கு பல்கலைக்கழக  மாணவர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்னாள்  கூடாரங்களை நிலைப்படுத்தி    கடந்த (07)  ஆம் திகதி  முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக வாளாகம் முழுவதும் கறுப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ள மாணவர்கள் பட்டப்படிப்பை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும்  , பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கமராக்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்  ,நான்கு வருட பட்டப்படிப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆறு வருடங்களில் நிறைவடைவதால்  இதனால் இரண்டு ஆண்டுகள் வீணாகவதாகவும் .உரிய நேரத்தில பரீட்சைகள் நடைபெற்று பெறுபேறுகள் வெளியிடுவதன் மூலம் நான்கு வருடங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ய முடியும்  ,.சிசிரீவி கமராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் போதுமான சுதந்திரம் இல்லை உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு  தமது போராட்டத்திற்கு தீர்வு  கிடைக்கும்  வரை போராட்டம்  தொடரும் என்ற நிலையில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்த போராட்டத்தின்  08வது  நாளாகிய இன்று மட்டக்களப்பு நகரில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் பல்கலைக்கழக  மாணவர்கள் ஈடுபட்டனர்


இந்த கையெழுத்து போராட்டமானது  மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக  இன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .