பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மனவளக்கலை அறிமுக நிகழ்வு

(லியோன்)

மனவளக்கலை தொடர்பாக அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவு படுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
. .

இலங்கை  மனவளக்கலை  மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் மனவளக்கலை   ஊடாக உடல் ஆரோக்கியம் , மண ஆரோக்கியம் , சமுதாய ஆரோக்கியம் , ஆன்மீக ஆரோக்கியம்  மூலம் மனிதனை மனிதனாக மாற்றும் கலை தொடர்பாக  ஆளுமையையும் ,ஆற்றலையும் விருத்தி செய்தல் தொடர்பாக தெளிவூட்டும்  பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய இலங்கை  மனவளக்கலை  மன்றம் மட்டக்களப்பு  தலைமையகத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மனவளக்கலை  மன்ற உறுப்பினர் கேதாரம் ராஜன் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக  அலுவலக உத்தியோகத்தர்களுக்கான மனவளக்கலை   தொடர்பாக தெளிவு படுத்தும்  மனவளக்கலை  அறிமுக நிகழ்வு  மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் வளவாளராக  ஒய்வு பெற்ற விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரும் , மனவளக்கலை  மன்ற பேராசிரியருமான ஆறுமுகம் தங்கராஜா கலந்துகொண்டு  மனவளக்கலை  தொடர்பான தெளிவூட்டளை வழங்கினார் .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன் , உதவி பிரதேச செயலாளர் .எஸ் .யோகராஜா மற்றும்  மண்முனை வடக்கு  பிரதேச செயலக அலுவலக  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்