பெந்தகொஸ் தினத்தை சிறப்பிக்கும் விசேட திருப்பலி

(லியோன்)

பெந்தகொஸ் தினத்தை சிறப்பிக்கும்  விசேட திருப்பலி ஆயர் தலைமையில்  (04)  ஞாயிற்றுகிழமை  ஒப்புகொடுக்கப்பட்டது .


மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்  ஆண்டகை தலைமையில் பெந்தகொஸ் தின விசேட திருப்பலி இன்று மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் ஒப்புகொடுக்கப்பட்டது .

பெந்தகொஸ் தினத்தை சிறப்பிக்கும்  விசேட திருப்பலியில்  பங்கு தந்தை அருட்பணி அலக்ஸ்  ரொபட் , மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார்   திருத்தல  பங்கு  தந்தை இன்னாசி ஜோசெப் ஆகியோர் இணைந்து  ஒப்புகொடுத்தனர் .

இந்த  விசேட திருப்பலியில்  மாணவர்களுக்கு   புதுநன்மை ,உறுதிப்பூசுதல்  ஆகிய தேவ அருள் அடையாளங்கள் ஆயரினால் வழங்கப்பட்டது .


இந்த விசேட திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர் .