கண்ணிவெடி அற்ற பாதுகாப்பான மாவட்டமாக மட்டக்களப்பு அறிவிப்பு

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்ணிவெடி அக்கற்றப்பட்டு பாதுகாப்பான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் முதலாவதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் எம்.கே.சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக அமெரிக்க தூதுவர் அப்துர் ஹசாம்,அவுஸ்ரேலய தூதுவர்,கனடா ஆகிய நாட்டின் தூதுவர்களும் ஜப்பான் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலையினை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை உத்தியோகபூர்வமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்குமு; நிகழ்வு நடைபெற்றது.

இதனையொட்டி மட்டக்கள்பபு பாடுமீன் விடுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் கண்காட்சி நடைபெற்றதுடன் அதனை அதிதிகள் பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கண்ணிவெடி அகற்றப்பட்ட மாவட்டம் என்னும் வகையிலான ஆவனங்களும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 509.8 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தியடைந்துள்ளது.இவற்றில் 1276546வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மைக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.