அம்பிளாந்துறை சு.சந்திரகுமார் முதுதத்துவமாணிப்பட்டம் பெற்றார்.

(மண்டூர் நிருபர்)மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தின் அம்பிளாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட சு.சந்திரகுமார் அவர்கள் முதுதத்துவமாணிப்பட்டம் பெற்றார்.
அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்விகற்று மட்டுநகரில் உயர்கல்விபயின்று பல்கலை சென்று பலபட்டம் பெற்று பல்கலை
கழக விரிவுரையாளராகி பற்பல படிகளைத் தாண்டி உயர்வு பெறும் சுந்தரலிங்கம் சந்திரகுமார் அவர்கள்
முதலாவது இளங்கலைமாணி (BA Hons), இரண்டாவது முதுகலைமாணி (M.A), மூன்றாவது பட்டப் பின் கல்வி டிப்ளோமா(PGD in Education), நான்காவது பட்டம் முதுதத்துவமாணி(M.Phil) பட்டத்தை கிழக்குப்பல்கலைக்கழகத்தில் 18.06.2017 அன்று பெற்றுக்கொண்டார். இந்த ஆராய்ச்சி தனது கற்றல் கற்பித்தலுக்கான புலமைத்துவத்தை ஆழ அகல விரியவைத்தது.அவரது கற்பித்தலை வினைத்திறன் உள்ளதாக முன்னெடுக்கின்றார் ஆராய்ச்சியை மேலும் வலுப்படுத்துகின்றார்.கிழக்கு பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல பிரதேசங்களுக்குச் சென்று பல கலைஞர்களை சந்தித்து திறம்பட தனது கலையுணர்வினை வெளிப்படுத்தியுள்ளார்.இவர் தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.