“உதிரம் வழங்கி அடுத்தவரின் உயிரைக் காப்போம்” மாபெரும் இரத்ததான முகாம்

(லியோன்)

உதிரம் வழங்கி அடுத்தவரின் உயிரைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு நடைபெற்றது .


இலங்கை மனித உரிமைகள் அமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக கிளை, மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களம், விளையாட்டு கழகங்கள் மற்றும் மண்முனை வடக்கு இளைஞர் கழகங்கள் இணைந்து முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில்  இரத்த வங்கி வைத்திய பிரிவு அதிகாரிகளினால்  விடுக்கப்படுகின்ற  வேண்டுகோளுக்கு இணங்க இளைஞர்கள் கழகங்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்  இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம் இன்று காலை 09.00மணி முதல் பிற்பகல் 01.00மணி வரை நடைபெற்றது .

இந்த இரத்ததான முகாமில் மனித உரிமைகள் அமைப்பின் தேசிய நிர்வாக பணிப்பாளர் டி .எம் . சந்திரபாலன் , மனித உரிமைகள் அமைப்பின் தேசிய திட்ட பணிப்பாளர் அசோக்குமார் , மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஆர் . பாத் லெட், .முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஐ .பயஸ்ராஜ் ,,மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட நிர்வாக பணிப்பாளர்  செல்வநாதன் , மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் அமைப்பின் விசாரணை அதிகாரிகாரிகளான  ஐ .எம் . தசிர் , கே ரஜனிகாந்த் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்  விவேக்  .வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்