புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பப்பிரிவு நிர்வாக கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு  புனித மிக்கேல் கல்லூரி ஆரம்ப பிரிவில்   நிர்மாணிக்கப்படவுள்ள  மூன்று  மாடி கட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு  (21)  இன்று நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பப் பிரிவில் கல்வி அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள  மூன்று  மாடி நிர்வாக கட்டிட தொகுதிக்கான   அடிக்கல் நாட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா  தலைமையில் நடைபெற்றது .

பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின்  24  மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம்  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பப் பிரிவில் மூன்று மாடி   நிர்வாக தொகுதி கட்டிடம்  நிர்மாணிக்கப்படவுள்ளது .


நடைபெற்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்  அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் , பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா , ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி  மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி எ .சுகுமாரன் , இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி என் . வள்ளிநாயகம் , தொழில் அதிபரும் உலக தமிழ் சங்க தலைவருமான  வி .ஜி . சந்தோசம் ஆகியோருடன் 30  மேற்பட்ட கல்வி மான்கள் ,கல்வி அறிஞர்கள்  மற்றும் பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்