விழிப்புலனற்றோர்களுக்கான தொழில் பயிற்சி நிலையம்

(லியோன்)

உதயம் விழிப்புலனற்றோர்களுக்கான  தொழில் பயிற்சி நிலையம் (09) மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது . 


விழிப்புலனற்றவர்களை வாழ்வில் ரீதியாக முன்னேற்றிச் செல்வதற்கான தொழில் பயிற்சி நிலையம்  உதயம் விழிப்புலனற்றோர் சங்க தலைவர்  எம் . ஜதீஸ் தலைமையில்  மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா , காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எ டப்ளியு .இ .வெலகெதர , ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் எப் . அல்மேதா ஆகியோர் இணைந்து தொழில் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தனர் .

விழிப்புலனற்றவர்கள்  எவரும் யாரிடமும் கையேந்தாது , விழி இழந்தவன் தங்கி வாழக்கூடாது , தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தாங்கி வாழ்கின்ற தனிமனிதனாக வளர வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு தொழில் பேட்டை நிறுவ வேண்டும் என்ற நோக்குடன் இந்த தொழில் பயிற்சி நிலையம் திறந்தி வைக்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி , மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர் டி . ராஜ்மோகன் , காத்தான்குடி பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி ஜெயசீலன் ,உதயம் விழிப்புலனற்றோர் சங்க ஆலோசகர்  ராஜன் மயில்வாகனம்  மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் ,உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்