வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய மஹோற்சவ கொடியேற்ற நிகழ்வு

(லியோன்)

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு  வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு  ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்  ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ  (27) கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.


விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக ப+ஜை மற்றும் அபிசேக பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை உள்வீதியுலா கொண்டுவரப்பட்டு தம்த்தடியில் விசேட பூஜைகள் நடைபெற்ற வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசம் வானைப்பிளக்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசே மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.

பத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா நடைபெறவுள்ளது.


இந்த உற்சவத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி  உரியடி உற்சவம்  நடைபெறவுள்ளதுடன் 09 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன்  நிறைவுபெறவுள்ளது