“சூழல் எம்மைக் காக்கும் நாம் சூழலைக் காப்போம்” மாணவர்களின் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வு


(லியோன்)


பேண்தகு பாடசாலை அபிவிருத்தி தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி , சுற்றாடல் பாதுகாப்பு  ,போதைபொருள் ஒழிப்பு  , சிறுநீரக நோய் தடுப்பு சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு போன்ற தேசிய   நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனஇதற்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் இந்த பேண்தகு பாடசாலை அபிவிருத்தி தேசிய  நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது .


இதன்கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் “சூழல் எம்மைக் காக்கும் நாம் சூழலைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில்  சுற்றாடலை  பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியும் ,விற்பனையும் கல்லூரி அதிபர்கே . அருமைராஜா தலைமையில்  கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது  .


சுற்றாடலை  பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு  நிகழ்வில் மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றது


இந்நிகழ்வில்  மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , பிரதேச சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான  திருமதி ஆர் .பாஸ்கரன் , கே . லோகராஜா , மட்டக்களப்பு கனிஷ்ட வித்தியாலய அதிபர்  அருமைத்துரை மற்றும்  மண்முனை வடக்கு கல்வி கோட்ட பாடசாலைகளின் மாணவர்கள் ,ஆசிரியர்கள்   என பலர் கலந்துகொண்டனர்