சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை மட்டக்களப்பு கிளையினால் நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் நிவாரணப் பொருட்கள் இன்று வியாழக்கிழமையன்று கையளிக்கப்பட்டன.

 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களிடம் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவடட கிளையின் தலைவர் ஏ.எல்.மீராசாகிப் அந்த நிவாரணப் பொருட்களை கையளித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்ப நகரிலுள்ள காந்திப்பூங்காவில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.