தமிழ்மொழி டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்த உத்தியோகத்தர்கள் வெளியேறும் நிகழ்வு

(லியோன்)

தமிழ்மொழி டிப்ளோமா  கற்கை நெறியினை நிறைவு செய்த சிங்களப் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  வெளியேறும்  நிகழ்வு  (23) மட்டக்களப்பில் நடைபெற்றது.


மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து  மாதகால தமிழ்மொழி டிப்ளோமா  கற்கை நெறியினை நிறைவு செய்த 150  சிங்களப் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  வெளியேறிச்செல்லும் நிகழ்வு  மட்டக்களப்பு கல்லடியில்  நடைபெற்றது.

மையங்கனை மற்றும் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் தமிழ் மொழி  பயிற்சிக் கல்லூரியின் பணிப்பாளர் சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகர் எஸ் செல்வராஜா    தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு – கிழக்கு  பகுதிகளில் கடமை யாற்றும்  சிறந்த 150  பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயிற்சியினை நிறைவு செய்து  வெளியேறியுள்ளனர்

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ்  கல்லூரியில் இரண்டாம் மொழி தமிழ் கற்கை நெறியினை நிறைவு செய்து வெளியேறும்  13 வது அணி இதுவாகும்.

இவர்களுக்கான  மொழி பயிற்சியாளர்களாக  மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் தமிழ் மொழி பயிற்சிக் கல்லூரி இணைப்பாளர்  பொலிஸ் பரிசோதகர் ஐ .பி . ரோச்ஜ்  மற்றும் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பயிற்சி  ஆசிரியர்கள்  கடமையாற்றியுள்ளனர் .

இந்நிகழ்வில் பயிற்சி கல்லூரி பிரதி பணிப்பாளர் எ .எஸ் .பி . அனுர சில்வா , பயிற்சிக் கல்லூரி பொலிஸ் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர்.