2017 -2018 ஆண்டுக்கான புதிய லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வு

 
(லியோன்)

மட்டக்களப்பு லயன்ஸ் கழக 42வது ஆண்டு நிறைவு நிகழ்வும் 2017 -2018 ஆண்டுக்கான புதிய லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வும் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தின்  மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின்  42வது ஆண்டு நிறைவு விழாவும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்திற்கான 2017 -2018 ஆண்டுக்கான புதிய தலைவருக்கான பதவி பிரமாண நிகழ்வும் லயன்ஸ் கழக  தலைவர் கே .ரவிச்சந்திரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது . 

இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக  சிரேஷ்ட லயன் உறுப்பினர்களினால் கழக லயன் உறுப்பினர்களுக்கு மலர்மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு  அழைத்து வரப்பட்டனர் .

இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களின் சத்திய பிரமான நிகழ்வும் தொடர்ந்து புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் புதிய அங்கத்தவர்கள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்  நடைபெற்றது . 

இதனை தொடர்ந்து புதிய லயன்ஸ் கழக தலைவராக லயன் எல் ஆர் .டேவிட் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட லயன்ஸ் கழக உறுப்பினர் லயன்  ஜி .பாஸ்கரன் மற்றும் முன்னாள் லயன்ஸ் கழக தலைவர்கள் , புதிய  லயன்  உறுப்பினர்கள் , கழக பெண் லயன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் ,


இந்த நிகழ்வின் போது சிறந்த சமூக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்ற லயன் உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட லயன் உறுப்பினர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது