தாழங்குடா புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் வருடாந்த திருவிழா


(லியோன்)

மட்டக்களப்பு  தாழங்குடா புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் வருடாந்த திருவிழா  கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு  தாழங்குடா புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் வருடாந்த திருவிழா  கொடியிறக்கத்துடன் இன்று நிறைவுபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குத்தந்தை  ரெட்னகுமார்  தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவில் நேற்று மாலை  புனிதரின்  திருச்சொரூப பவனியும் தொடர்ந்து  நற்கருணை ஆராதனையும்  நடைபெற்றது.

ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று விசேட திருப்பலியினை   திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல்  ஆண்டகையினால்  ஒப்புகொடுக்கப்பட்டது .

இந்த திருப்பலியில் ஆயருடன் இணைந்து  பங்குத்தந்தை  ரெட்னகுமார் , அருட்தந்தை நவரெட்ணம் , அருட்தந்தை மொறாயஸ் ஆகியோர்  திருப்பலியை  ஒப்புகொடுத்தனர்

திருப்பலியை தொடர்ந்து  புனிதரின்  திருச்சொரூப பவனியும்   தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்வு ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றதுடன் திருச்சொரூப ஆசிர்வாதமும் இடம்பெற்றது .


இந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்