சிகரங்களின் சமர் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி சம்பியன்

மட்டக்களப்பு சிகரங்களின் சமர் கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் சிகரங்களின் சமர் என்னும் தலைப்பில் மாபெரும் கிரிக்கட்;போட்டி நேற்று சனிக்கிழமை இந்த கிரிக்கட் போட்டி நடைபெற்றது.

07வது ஆண்டாக மட்டக்களப்பு இந்துகல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற்றது.

பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் என்.நல்லதம்பி தலைமையில் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிர் சி.தாண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

50ஓவர்களைக்கொண்ட இந்த கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி களத்தடுப்பினை தெரிவுசெய்யதது.

இதனடிப்படையில் முதலில் துடுப்படுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.

140 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் வீரர்கள் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் 120 ஓட்டங்களை மட்டுமே 41 ஓவர்களில் பெறமுடிந்தது.

இதனடிப்படையில் 19ஓட்டங்களினால் மட்டக்களப்பு இந்துகல்லூரி வெற்றிவாகை சூடி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

கடந்த ஆண்டு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 06வது சிகரங்களின் சமர் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.