கல்லடி கடற்கரைப் பூங்கா மாநகர சபைக்கு கையளிக்கும் நிகழ்வு

(லியோன்)

கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தினால்  மட்டக்களப்பு கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள  கடற்கரைப் பூங்காவை  கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது .


மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் பங்குபற்றலுடன் நிலையான கரையோர வலய மீளமைப்பு மற்றும் நீடித்து நிலைக்க கூடிய முகாமைத்துவ திட்ட கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின்  மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப் பூங்காவை  மட்டக்களப்பு மாநகர சபைக்கு கையளிக்கும் நிகழ்வு மாநகர ஆணையாளர் வி .தவராஜா தலைமையில் நடைபெற்றது .     

மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை பகுதிகளை  சுற்றுலா துறைக்கு உகந்த இடமாக கடற்கரையை மாற்றும் நோக்குடன் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் கீழ்  கல்லடி கடற்கரை  சூழலியல் பூங்கா அமைக்கப்பட்டு மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது .


இந்நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் . சாள்ஸ் கலந்துகொண்டு பூங்காவை திறந்து வைத்தார் . இந்த விசேட நிகழ்வில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்கள தேசிய திட்ட முகாமையாளர் பிறேமதிலக , கரையோர மூலவள முகாமை திணைக்கள சிரேஷ்ட பொறியிலாளர் திருமதி எஸ் . மங்களா மற்றும் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்கள உத்தியோகத்தர்கள் , மாநகர சபை ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்