மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர்  வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடைபெற்றது 
.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கம் மாமாங்கேஸ்வரர்  வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் , வீதி நாடகமும்  வித்தியாலய சுகாதார கழக பொறுப்பாசிரியர்களான திருமதி எம் .சங்கர் .திருமதி , கே .யுவராஜா  ஒழுங்கமைப்பில் வித்தியாலய அதிபர் வி .முருகதாஸ்  தலைமையில்  மாமாங்க  கிராம பகுதியில்நடைபெற்றது

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வின் போது  உயிர் கொள்ளி டெங்குவை ஒழிப்போம் ,  எம்மை  டெங்கு  நோயில் இருந்து பாதுகாப்போம் , எமது சூழலை  டெங்கு அற்ற  இடமாக மாற்றுவோம்  என்ற வாசகங்களை ஏந்திய வாறு  ஊர்வலத்தில் கலந்துகொண்டதுடன் , மாணவர்களின்  வீதி நாடகங்களும் இடம்பெற்றது .

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள்  கலந்துகொண்டனர் .