முன்பள்ளி ஆசிரியர்களுக்கு போசாக்கு தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு

(லியோன்)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு போசாக்கு தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு  மட்டக்களப்பு  தன்னாமுனை மியாணி நகரில்  நடைபெற்றது


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தினால் போசாக்கு தொடர்பான பல்துறை . நடவடிக்கைத் திட்டத்தின்கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்கள்  உள்ளடங்கும் வண்ணம் வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  

இதன் கீழ் இலங்கையில் உள்ள 1500 முன்பள்ளிகளை தெரிவு செய்து சிறுவர்களை இலக்காகக்கொண்டு போசாக்கு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றன

இந்த திட்டத்தின் கீழ் உணவு மற்றும் விவசாய தாபனமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிகளில் தெரிவு செய்யப்பட 125 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு போசாக்கு தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு  நடைபெற்றன  

மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி முரளிதரன் ஒழுங்கமைப்பில் உதவி  மாவட்ட செயலாளர்  எ. .நவேஸ்வரன் தலைமையில்  நடைபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வில்   உணவு மற்றும் விவசாய தாபன திட்ட முகாமையாளர் மற்றும் திட்ட நிபுணர்  கலந்துகொண்டனர் .


செயலமர்வில் வளவாலர்களாக  பிராந்திய சுகாதார சேவைகள் பணியக தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்