ஏனைய பிரச்சினைகளில் அக்கறை காட்டும் அரசாங்கம் எமது பிரச்சினைகளில் காட்டவேண்டும் -பட்டதாரிகள்

ஏனைய பிரச்சினைகளில் அக்கறைகாட்டும் அரசாங்கம் எமது பிரச்சினையிலும் முழு மூச்சுடன் அக்கரை காட்டவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 79வது நாளாகவும் இன்றும் நடைபெற்றுவருகின்றது.

தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி 79நாட்களாக போராடிவரும் தமது நிலை தொடர்பில் முறையான நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமது போராட்டத்தினை தொடர்ந்து தமது தொழில் நியமனங்களுக்கான ஆளணி அனுமதி கிடைத்துள்ளபோதிலும் இதுவரையில் திறைசேரி அனுமதி வழங்கவில்லை.

தமது பிரச்சினை தொடபுர்பில் பிரதமர்,ஜனாதிபதி ஆகியோர் கரிசனையுடன் செயற்படும்போதே தமது பிரச்சினையை தீர்க்கமுடியும் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

போராட்ட இடத்திற்கு விஜயம்செய்த பிரதமரின் ஆலோசகர்கள் ஓரு மாதகால அவகாசம் கோரியிருந்தனர்.ஆனால் அந்த ஒரு மாத காலத்தினை தாண்டியுள்ள நிலையிலும் இதுவரையில் உறுதியான பதில்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமது பிரச்சினையை தீர்ப்பதற்கு உண்மையான உறுதியான நடவடிக்கையினை அரசாங்கம் எடுத்திருந்தால் அது தொடர்பில் உறுதிமொழியை வழங்கவதற்கு ஏன் அரசாங்கம் தயக்கம் காட்;டுகின்றது எனவும் பட்டதாரிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இன்று பல்வேறு கருத்துகள் தமது நியமனங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாகவும் அவவை கவலையளிப்பதாகவுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.