மாணவர்களுக்கான வீதி வழிமுறைகள் தொடர்பான பயிற்சிகள்

(லியோன்)

பாடசாலை  மாணவர்களுக்கான  வீதி வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் மட்டக்களப்பில்  நடைபெற்றது


இலங்கை  பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு  அமைவாக வீதி வழிமுறைகள்  தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலங்கை வாகன போக்குவரத்து பொலிசாரினால் விழிப்புணர்வு செயல் திட்டங்கள் நாடளாவியல் ரீதியில் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய  மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கே .பி . கீர்த்திரத்ன  வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய வாகன  போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி  எஸ் எஸ் பி சமன் யட்டவர  தலைமையில்   மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான  விழிப்புணர்வு பயிற்சிகள்  நடைபெற்றது .

மாணவர்களுக்கான  வீதி  வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு வாகண  போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி  ஆர் எம் எஸ் ஐ  ராஜபக்க்ஷ பயிற்சிகளை வழங்கினார்

இதன் போது பிரதான வீதிகளை பாதுகாப்பான முறையில் கடப்பது மற்றும் வீதி போக்குவரத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் தொடர்பில்  மாணவர்களுக்கு  விளக்கமளிக்கப்பட்டது .