அமிர்தகழி இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் அறநெறி பாடசாலை திறப்பு விழா

(லியோன்)

இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் அறநெறி பாடசாலை திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கம்  பிள்ளையார் ஆலய இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் அறநெறி பாடசாலை திறந்து வைக்கும் நிகழ்வு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கம்  பிள்ளையார் ஆலய வண்ணக்கர் மயில்வாகனம் அரசரெத்தினம் தலைமையில் இன்று நடைபெற்றது .     

 இந்நிகழ்வானது அமிர்தகழி கண்ணகி அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள ஏலூர் மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைதொடர்ந்து ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் சுவாமி  பிரபு பிரேமானந்தா மகராஜ் சுமாமியின் ஆசியுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது

நிகழ்வினை தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளும் வழங்கிவைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா மகராஜ் , மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர் ஞா .நேசன் மதுரை காமராஜ் பல்கலைக்கழக இலங்கை – இந்தியா ஒருங்கிணைப்பாளர் ஒ கே . குணநாதன் , மண்முனை வடக்கு இந்து கலாசார பிரிவு து .சிவதர்சினி ,  கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி . எம் .பிரியதர்சினி  , ஆலய  வண்ணக்கர்மார்  ,ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .