ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”தேவை

ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”தேவை என்று குடிவரவுத் துறையை அணுகாமல் இருக்கும் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்களும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இதுவே தாம் அவர்களுக்கு விடும் இறுதி எச்சரிக்கை என்றும் குடிவரவுத் துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.

இப்படி ஆஸ்திரேலிய குடிவரவுத் துறையை அணுகாமல் இருக்கும் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்களும்  “போலியான அகதிகள்”( fake refugees)  என்று அமைச்சர் Dutton வர்ணித்தார்.
தமது இறுதி எச்சரிக்கையையும் புறக்கணித்துவிட்டு நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அரசு கொடுப்பனவுகள் வழங்கப்படாது என்றும், அவர்கள் திருப்பி அனுப்பபடுவர் என்றும், அவர்கள் ஒருபோதும் மீண்டும் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குடிவரவுத் துறை அமைச்சர் Peter Dutton கூறினார்.

2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டுவரை நாட்டில் புகலிடம் கோருகிற்றவர்கள் என்பதாக படகுவழி மட்டுமே சுமார் 50,000 பேர் வந்துள்ளனர். அவர்களில் 43,000 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கபட்டுள்ளன. அதே வேளையில் ஆஸ்திரேலிய குடிவரவுத் துறையை அணுகாமல் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்கள் மறைந்து வாழ்கின்றனர் என்றும் இவர்களுக்கு தொடர்ந்து Centrelink வழி வழங்கும் கொடுப்பனவு மூலம் அரசுக்கு $250 million டாலர் செலவாகிறது என்றும் 
ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க “பாதுகாப்பு விசா”( Protection Visa) தேவை என்று குடிவரவுத் துறையை அணுகாமல் இருக்கும் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்களும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இதுவே தாம் அவர்களுக்கு விடும் இறுதி எச்சரிக்கை என்றும் குடிவரவுத் துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.
இப்படி ஆஸ்திரேலிய குடிவரவுத் துறையை அணுகாமல் இருக்கும் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்களும்  “போலியான அகதிகள்” என்று அமைச்சர் Dutton வர்ணித்தார்.

தமது இறுதி எச்சரிக்கையையும் புறக்கணித்துவிட்டு நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அரசு கொடுப்பனவுகள் வழங்கப்படாது என்றும், அவர்கள் திருப்பி அனுப்பபடுவர் என்றும், அவர்கள் ஒருபோதும் மீண்டும் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டுவரை நாட்டில் புகலிடம் கோருகிற்றவர்கள் என்பதாக படகுவழி மட்டுமே சுமார் 50,000 பேர் வந்துள்ளனர். அவர்களில் 43,000 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கபட்டுள்ளன. அதே வேளையில் ஆஸ்திரேலிய குடிவரவுத் துறையை அணுகாமல் சுமார் 7500 புகலிடக் கோரிக்கையாளர்கள் மறைந்து வாழ்கின்றனர் என்றும் இவர்களுக்கு தொடர்ந்து Centrelink வழி வழங்கும் கொடுப்பனவு மூலம் அரசுக்கு $250 million டாலர் செலவாகிறது என்றும் குடிவரவுத் துறை அமைச்சர் Peter Dutton கூறினார்.