பெரிய புல்லுமலை திருத்தலத்தில் நீரூற்றுக் கிணறு ஆயரினால் திறந்து வைக்கப்பட்டது

(லியோன்)

மட்டக்களப்பு பெரிய புல்லுமலை  புதுமைமிகு புனித செபமாலை அன்னை திருத்தலத்தில் நீரூற்றுக் கிணறு  ஆயரினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது .


மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் சிறப்பு மிக்க திருத்தலமான பெரிய புல்லுமலை  புதுமைமிகு புனித செபமாலை அன்னை திருத்தலத்தில்  அன்னையின் அருளால் கிடைக்கப்பெற்ற நீரூற்றுக் கிணற்றை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு  திறந்து வைக்கப்பட்டுள்ளது .

 இதேவேளை திருத்தலத்திற்கு வருகை  தரும் பக்தர்களின் நலன் கருதி யாத்திரிகர் தங்குவதற்கான மடம் திருத்தல பொருட்கள் விற்பனை கூடம் , அன்னையின் திருச்சுருப  பீடம் (கெபி ) என்பன ஆயரினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது .