தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

(லியோன்)



மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த  அலங்கார உற்சவத்தின்  திருக்கதவு  திறத்தல்  வைபவம் 29.05.2017  மாலை  நடைபெறவுள்ளது .




கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்  29ஆம் திகதி   திங்கள்கிழமை மாலை  திருக்கதவு  திறத்தல்  உற்சவத்துடன்  பெருவிழா ஆரம்பமாகி எதிர்வரும்  09.06.2017 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ஆலய வருடாந்த உற்சவம் இனிதே  நிறைவுபெறும் .


ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் மாலை அபிஷேக அலங்கார பூசைகள்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூபக் குருக்கள் தலைமையில்  நடைபெறும் .


ஆலய உற்சவத்தின் 5தாம் நாள் சடங்கு  02.06.2017    வெள்ளிக்கிழமை மாலை கல்யாணக் கால் வெட்டும் சடங்கு இடம்பெற்று  வழமையான வீதியூடாக அம்பாள் ஊர்காவல் பண்ணும் நிகழ்வும் இடம்பெறும் .


 07.06.2017 ஆம் திகதி  புதன்கிழமை  அதிகாலை தீ மிதிப்பு வைபவம் நடைபெற்று   09.06.2017 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை   அதிகாலை திருக்குளிர்த்தி பாடி அம்பாளின்  வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளது