பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தின் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தின் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் மஹாகும்பாபிசேகம் எதிர்வரும் திங்கட்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

மஹாகும்பாபிசேகத்தினை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன்  இன்று சனிக்கிழமை(27) காலை 8.00மணி தொடக்கம் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00மணி வரையில் அடியார் எண்ணெய்க்காப்பும் சாத்தும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலசபையின் தலைவர் சி.பேரின்பராஜா தெரிவித்தார்.

திங்கட்கிழமை காலை 8.00மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி 10.45மணி தொடக்கம் 12.16மணி வரையிலான சுபவேளையில் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

தெல்லப்பளை ஸ்ரீதுர்க்காதேவி வேதாகம பாடசாலையின் அதிபர் பிரதிர்ஷடா சக்கரவர்த்தி பிரதிஷ்டா சிரோண்மணி பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சாரியார் தலைமையில் கிரியைகள் நடைபெறவுள்ளது.

இந்த கும்பாபிசேக நிகழ்விலும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளும் அடியார்களுக்கான அன்னதானம் மற்றும் தாகசாந்தி ஏற்பாடுகளை பெரியகல்லாறு விஸ்வப்பிரம்ம வாலிபர்கள் சங்கமும் ஆலய பரிபாலனசபையினரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த கும்பாபிசேக நிகழ்விலும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளாட்சியை பெற்றுச்செல்லுமாறு ஆலய பரிபாலசபையின் தலைவர் சி.பேரின்பராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.