ஈச்சந்தீவு உதயசூரியனின் சம்பியன் கனவு தகர்ந்தது.





மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற பெண்களுக்கான எல்லே போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகம் வவுணதீவு விபுலானந்தா இளைஞர் கழகங்கள் மோதிக் கொண்டன.

இப் போட்டியில் வவுணதீவு விபுலானந்தா இளைஞர் கழக பெண்கள் அணி மூன்று ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கி கொண்டது.

 நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடிய வவுணதீவு விபுலானந்தா இளைஞர் கழக பெண்கள் அணி
 30 பந்துகளுக்கு மூன்று ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு விளையாடிய ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர்கழக மகளீர் அணி ஒரு ஓட்டங்களை மாத்திரமே பெற்று இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.



ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழக மகளீர் அணியானது பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட நிலையில் சொந்த மைதானத்திலே தேல்வியை தழுவிக்கொண்டது அந்த அணியின் ஆதரவாளர்களை பெரிது ஏமாற்றமடையச்செய்துள்ளது.

இந்த அணியானது கடந்த இருவருடங்களாக பிரதேசமட்ட போட்டிகளில் முதலாமிடத்தினை பெற்றுவந்ததுடன் இம்முறை வெற்றிபெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் சம்பியன் என்ற நிலையை தக்கவைத்திருக்கும்.

ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழக மகளீர் அணி மாவட்டம் தேசிய ரீதியிலானா போட்டிகளில் கலந்துகொண்டு பயிற்சி மற்றும் அனுபவம்மிக்க அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.