கல்லடியில் நடைபாதை வியாபாரிகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கையின்போது பதற்றம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடி பகுதியில் வீதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகெயடுக்கமுற்பட்டபோது அங்கு சிறிய பதற்ற நிலையேற்பட்டது.

கல்லடி பகுதியில் வீதிகளில் மீன் உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டுவரும் நிலையில் வீதியில் பல அசௌகரியங்கள் நடைபெறுவதாகவும் அதன் காரணமாக குறித்த பகுதிகளில் விற்பனைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இதன்போது அங்கு பொதுமக்கள் சிலருக்கும் மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கும் இடையே வாய்த்தர்;க்கம் ஏற்பட்டதன் காரணமாக சிறிது பதற்ற நிலையேற்பட்டது.

ஏனைய பகுதிகளில் இருந்து இங்குவருவோர் வியாபாரம் செய்கையில் இப்பகுதியில் உள்ளோர் வியாபாரம் செய்யும்போது மட்டும் மட்டக்களப்பு மாநகரசபையினர் தடுப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

எனினும் வீதியில் வியாபாரம் செய்வது யாராகவிருந்தாலும் மட்டக்களப்பு மாநகரசபை நடவடிக்கையெடுக்கும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

எனினும் இறுதியாக வியாபாரிகள் அனைவரும் அகற்றப்பட்டதுடன் கல்லடி மீன்சந்தைக்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறும் பணிக்கப்பட்டது.

வியாபாரிகளுக்காக சந்தை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் வியாபாரம் செய்பவர்களினால் தினமும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.