பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு

(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
        

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில் தேசிய ஊடக கற்கை நெறிகளுக்கான செயலமர்வுகள்  நடாத்தப்பட்டு முதல் முறையாக கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய ஊடக கற்கை நெறிக்கான செயலமர்வு  இன்று  நடைபெற்றது

இந்நாட்டின் இளைஞர்களின்  கல்வி ,கலாசாரம் , விளையாட்டு ,வணிகம் மற்றும் தொழில்நுற்ப துறையிலான ஆற்றல் ஆளுமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான கலங்களை அமைத்து கொடுக்கின்ற தேசிய சேவைகள் மன்றம்   ஊடக துறையில் மொழி ஆற்றல்கள் எவ்வாறு பிரகாசிக்க செய்வது  என்பது தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்காக  ஊடக கற்கை நெறி தொடர்பான  செயலமர்வு , தேசிய இளைஞர் சேவைகள்  மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹாலிதின் ஹமீன் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.  

பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கை நெறிக்கான  பயிற்றுவிப்பாளராக  அனுராதபுரம் மத்திய கல்லூரி அதிபரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளருமான நசீர் எம் அஹமட் . இலங்கை தமிழ் ஓசை வானொலி முகாமைத்துவ பணிப்பாளர்  எ எம் . ஜெசீம் , தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அறிவிப்பாளர் எஸ் . சிவராஜா ஆகியோர்  கலந்துகொண்டார்கள்


பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கை நெறிக்கான  ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற  உத்தியோகத்தர்களான  திருமதி .கலாராணி யேசுதாசன் ,  திருமதி . நிஷாந்தி அருள்மொழி , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர் ,யுவதிகள் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்