வாகரை சூழலிய பூங்கா வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது

(லியோன்)

கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைதத்துவ திணைக்களத்தினால்  வாகரையில் அமைக்கப்பட்டுள்ள சூழலிய பூங்கா வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது
.   

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் பங்குபற்றலுடன் நிலையான கரையோர வலய மீளமைப்பு மற்றும் நீடித்து நிலைக்க கூடிய முகாமைத்துவ திட்ட கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைதத்துவ திணைக்களம் வாகரை வனவள திணைக்கள அங்கீகாரத்துடன் வாகரை கண்டல் அடியில் அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்காவை   கையளிக்கும் நிகழ்வு  நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை பகுதிகளை  சுற்றுலா துறைக்கு உகந்த இடமாக கடற்கரையை மாற்றும் நோக்குடன் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைதத்துவ  திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் கீழ்  வாகரை  கண்டல் அடியில் அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்கா வாகரை வனவள திணைக்களத்திடம்  கையளிக்கப்பட்டது .

இதேவேளை வாகரை கரையோர பிரதேசத்தில் பெண்கள் தலைமை தாங்கும்  குடும்ப பெண்களுக்கான வாழ்வாதார  நிதி உதவிகளும் ,சுற்றுலா துறை தொடர்பாக பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு  சான்றிதழ்களும் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைதத்துவ  திணைக்களத்தினால் வழங்கப்பட்டது .

கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் திருமதி எஸ் .ஆர் . ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய கரையோர மூலவள முகாமை திணைக்கள  பிரதம பணிப்பாளர் பிரபாத் சந்திர கீர்த்தி  மற்றும்  கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்கள உத்தியோகத்தர்கள் , கிராம பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்