ஆரையம்பதியில் ஆலயத்தின் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 18பேர் படுகாயம்

மட்டக்களப்பு,ஆரையம்பதி பகுதியில் ஆலயத்தின் முன் மண்டபம் உடைந்து வீழ்ந்ததில் 18பேர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி மாரியம்மன் ஆலயம் ஒன்றில் முன் மண்டபத்திற்கான மண்டபத்திற்கான கொங்கிறீட் இடும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அது உடைந்து வீழ்ந்ததினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த வேலையாளர்கள் 18பேர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் எட்டுப்பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொங்றீட் இடும்போது கீழ் உள்ள முட்டுகள் முறையான வகையில் அமைக்கப்படாத காரணத்தினால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பொதுமக்கள் இணைந்து துரிதகதியில் மீட்பு பணியை மேற்கொண்டதன் காரணமாக உடனயாடிக அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் குறித்த பகுதிக்கு விரைந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மீட்பு பணிக்கு உதவிகளை வழங்கினார்.