மண்முனை மேற்கின் இந்த வருடத்திற்கான சம்பியனாக ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகம்.

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலக மட்டத்தில்  பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான 29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் கிறிக்கட் சுற்றுப்போட்டி 29.04.2017 சனிக்கிழமை நடைபெற்றது .

  மண்முனை மேற்கு பிரதேச  இளைஞர் கழக சம்மேளன தலைவர் ரி. விமல்ராஸ்  தலைமையில்    நாவற்காடு பொது விளையாட்டு மைதானத்தில்   நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகம் மண்முனை மேற்கின் இந்த வருடத்திற்கான சம்பியனாக  தெரிவு செய்யப்பட்டுள்ளது.

 இப்  போட்டித் தொடரில்  விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் கன்னங்குடா கண்ணகி இளைஞர் கழகத்தை  எதிர்த்து போட்டியிட்ட  ஈச்சந்தீவு உதய சூரியன் இளைஞர் கழகம்  பரபரப்புக்கு மத்தியில் ஏழு வீரர்களை இழந்து  இறுதி பந்து வீச்சு பிரதியின் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் ஆறு ஓட்டத்தை அடித்தாடி வெற்றியை தனதாக்கி கொண்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கன்னங்குடா கண்ணகி இளைஞர் கழக அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து எட்டு பந்து வீச்சு ஓவரில் 8 வீரர்களை இழந்து 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், எதிரணிக்கு சவாலாக பந்துவீச்சு களத்தடுப்பு என்பவற்றிலும் சிறப்பான ஆற்றலை  வெளிப்படுத்தியிருந்தது.


இப் போட்டித்தொடரில் வவுணதீவு விபுலாநந்தா இளைஞர் கழகம் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.