சமூக வலைத்தளங்களை கவனமாக கையாளாவிட்டால் விளைவுகள் பாரியதாக இருக்கும் -சிரேஸ்ட ஊடகவியலாளர் சீவகன்

சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமான அமையும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் தெரிவித்தார்.

ஊடக விஞ்ஞானம்!அறிதலும் சாதக வழி பிரயோகமும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விஞ்ஞானத்தின் ஊடாக சமூக அபிவிருத்தி அமைப்பின் (சயின்ஸ் நவீகேட்டர்ஸ்)ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் இலண்டன் பி.பி.சி.யின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள்,ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது ஊடகங்களின் இன்றைய நிலைமை,அவற்றினை கையாளும் வழிமுறைகள்,ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஆத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகங்களின் இன்றைய நிலைமை அவை கையாளப்படும் விதங்கள் தொடர்பில் கருத்துகள் பகிரப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் சீவகன்,

இன்று ஊடகத்துறையானது சமூக ஊடகத்துறையின் ஆதிக்கத்திற்குள் கட்டுப்பட்டுள்ளது.இன்று சமூக ஊடகத்துறை பெரும் வளர்ச்சிப்போக்கiயெட்டியுள்ளது.

நாங்கள் அதனை சிறந்தமுறையில் பயன்படுத்தினால் அதன் மூலம் சிறந்த வலையப்பினை ஏற்படுத்துவதுடன் தகவல்களை விரைவில் பரிமாறுவதற்கான நிலைமையும் காணப்படும்.

ஆனால் சமூக ஊடகங்களை மிகவும் கவனமான முறையில் கையாளவேண்டும்.அதனை நாங்கள் எமது தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தும்போது சிலவேளைகளில் அது எமக்கு ஆபத்தானதாகவும் மாற்றமடையலாம்.

எனவே சமூக ஊடகங்களை கையாளும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும்.அவற்றில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்பதை சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.