கிழக்கின் மூத்த எழுத்தாளர் ஆரையூர் நவம் ஐயாவின் உடல் அக்கினியுடன் சங்கமானது

கிழக்கு மாகாணத்தின் மூத்த எழுத்தாளரான சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயரைக் கொண்ட நவம் தனது 89ஆவது வயதில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் இயற்கை எய்தினார்.

அவர்கள் கடந்த12ம் திகதி அவர் மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்த நவம் அவர்கள் தமிழ் இலக்கியத் துறைக்குப் பங்காற்றிய மட்டக்களப்பு எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவராவார்.

இலங்கையில் நிலவிய யுத்த சூழலால் புலம்பெயர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாட்டிலும் பின்னர் ஜேர்மனி,கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வசித்து வந்த இவர் மீண்டும் தாய் மண்ணிற்குத் திரும்பி கடந்த நான்கு வருடங்களாக தனது சொந்த ஊரிலேயே இறக்கும் வரை வசித்துவந்தார்.

ஆரையம்பதி நவம் 1950களில் எழுத்துலகத்திற்குள்
பிரவேசித்தவர். ஆரம்பத்தில் நாடகத்தில் ஈடுபாடுகொண்டிருந்த இவர் நடிகராக, நெறியாளராக இயங்கி பின் படைப்புலகத்திற்குள் தன்னை நிலை நிறுத்தியவர்.

இதுவரை நந்தாவதி(சிறுகதைத்தொகுப்பு) , நீலவேனி, அழகுசுடுவதில்லையென இரு நாவல்களையும், சென்னை முதல் குமரிவரை என்ற பயணக்கட்டுரை நூலினையும், வாரிசுகள் என்ற தொகுப்பு நூலினை தனது புதல்வர்களின் படைப்புக்களுடன் தனது படைப்பினையும் இணைத்துத் தொகுத்துத்தந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் கல்கி இதழ் இலங்கையர்களுக்கான சிறுகதைப்போட்டியில் நவம் ஐயாவின் நந்தாவதி முதல் பரிசுபெற்றது.
நாட்டின் இனக்கலவரத்தை மையப்படுத்தி பிக்குவின் ஊடாக நகரும் கதைசொல்லி மிகச்சிறப்பான பெறுதியாக நந்தாவதியாக ஜனனித்தாள். 1960 களில் மிகச்சிறந்தகதையிது.அதுபோல் அவருடைய. கூத்துச்சிறுகதையும்
சிறந்தகதை க.பொ உயர்தர பாடவிதானத்தில் இக்கதை சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் தனக்கென ஒரு இடத்தினைக்கொண்டுள்ள நவம் ஐயாவின் உடலம் இன்று பிற்பகல் ஆரையம்பதியில் அக்கினியுடன் சங்கமமானது.