உதயம் விழிப்புனற்றோர் சங்கத்தின் புத்தாண்டு ஒன்றுகூடல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களை உள்ளடக்கிய உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கல்லடி நொச்சிமுனையில் உள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் எம்.ஜதிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.ரவீந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் எம்.லக்ஷ்மிகாந்தன் உட்பட சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் புதுவருடத்தினை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் புத்தாடைகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் மதியபோசனமும் வழங்கப்பட்டது.

குறித்த விழிப்புலனற்றோர் சங்கத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் கைத்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.