புகையிரத கடவையாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப தீர்மானம்

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடைவைக்காப்பாளர்கள்  (21.4.2017) வெள்ளிக்கிழமை முதல் தாம் கடமைக்கு திரும்ப தீர்மானித்துள்ளனர்.

 தமக்கு நிரந்தர நியமனம் கோரி கடந்த 13.4.2017 முதல் இவர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர்கள்  (21.4.2017) வெள்ளிக்கிழமை முதல் தாம் கடமைக்கு திரும்ப தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடைவைக்காப்பாளர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

கடந்த 4வருடங்களாக தற்காலிகமாக புகையிரத கடைவைக்காப்பாளர்களாக கடமைபுரிவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கி அவர்களை அரச சேவைக்குள் உள் வாங்குமாறு கோரி

மட்டக்களப்பில்  (19.4.2017)புதன்கிழமை பாதுகாப்பற்ற புகையிரத கடைவைக்காப்பாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.

 கடந்த 4வருடங்களாக தற்காலிகமாக புகையிரத கடைவைக்காப்பாளர்களாக கடமைபுரிவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கி அவர்களை அரச சேவைக்குள் உள் வாங்குமாறு இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமது கோரிக்கை அரசாங்கத்தின் பல தரப்பினருக்கும் முன் வைத்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 4வருடங்களாக 72 பேர் பாதுகாப்பற்ற புகையிரத கடைவைக்காப்பாளர்களாக நிரந்தர நியமனமின்றி கடமையாற்றுவதாகவும் இவர்களுக்கு மாதமொன்றுக்கு 28 நாட்கள் கடமை செய்தால் 7000 ரூபா சம்பளமும், 30 நாட்கள் கடமை செய்தால் 7500 ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் எங்களது குடும்ப ஜீவியத்திற்கே இந்த வேதனம் போதுமானதாக இல்லை. இதனால் நாங்கள் பொரும் சிரமப்படுகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடைவைக்காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜெயகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 பாதுகாப்பற்ற புகையிரத கடைவைகளில் 72 பேர் கடமையாற்றுகின்றோம். எம்மை வேறு ஒரு தொழிலுக்கும் செல்ல முடியாதவாறு எங்களை அடிமைகள் போல் வைத்துள்ளனர்.

எமது இந்த கோரிக்கையை ஏற்று எமது இந்த தொழிலை நிரந்தரமாக்கி சம்பள உயர் வழங்கி அரச ஊழியர்களுக்கு வழங்கும் அத்தனை சலுகைகளையும் எமக்கும் தரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.