பாடசாலைக்கான பெயர் பலகை மற்றும் சரஸ்வதி சிலை திறப்பு விழா நிகழ்வு


(லியோன்) 

புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கபட்டுள்ள சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான  பெயர் பலகை திறப்பு விழா  நிகழ்வு  (03) திங்கள்கிழமை நடைபெற்றது  


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கபட்டுள்ள சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான  பெயர்பலகை திறப்பு விழா  நிகழ்வு  வித்தியாலய அதிபர் கே .பாஸ்கரன்  தலைமையில் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடியேற்றப்பட்டு புதூர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ் . சபாரெத்தின குருக்களின் விசேட தீபாராதனை பூஜைகள்  நடைபெற்றது .

இதனை தொடர்ந்து சமூக சேவையாளரும், வர்த்தகருமான  எஸ் .ராஜ்குமாரின் நிதி வழங்களின் கீழ் பாடசாலை நலன்விரும்பிகளின் பங்களிப்புடன்  பாடசாலை வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலை திறந்துவைக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது  

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே . குணநாதன் ,கௌரவ அதிதிகளாக  மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ் எம்  ஹைதர் அலி , முன்னாள் அதிபர் அருமைத்துரை விசேட அதிதியாக  சமூக சேவையாளரும், வர்த்தகருமான   ராஜ்குமார் . மற்றும்  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .






























  .