டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக வைத்திய அத்தியட்சர் தெரிவிக்கின்றார் (வீடியோ இணைப்பு_.

 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.


டெங்கின் தாக்கம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவர் (02) ஞாயிற்றுக்கிழமை  மாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்ப போதனா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் இப்றாலெப்பை தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக டெங்கின் தாக்கம் அதிகரித்து  வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் அதேவேளையில் டெங்கின் தாக்கத்தினால் பாதிக்கப்படுவோர் அதிகரித்த நிலையிலேயே உள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு கல்லடி பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார் .

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் இரண்டாம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளமை .குறிப்பிடத்தக்கது