தேசிய சமாதான பேரவையின் எதிர்கால செயல் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

(லியோன்)

தேசிய சமாதான பேரவையின் எதிர்கால செயல் திட்டங்கள்  மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்   தொடர்பான கலந்துரையாடல்  மட்டக்களப்பில் நடைபெற்றது .


இலங்கையில் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் எனும் செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ஆறுமாத காலத்திற்கான திட்டங்கள்  மற்றும் மக்களிடையே இன முரண்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் தேசிய சமாதான பேரவையின்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது .

நடைபெற்ற கலந்துரையாடலில் போது மட்டக்களப்பு மக்களிடையே இருக்கின்ற இன முரண்பாடுகள் , முஸ்லிம்களுடைய காணி பிரச்சினை , சமாதான பேரவைக்கு முன்வைக்கப்பட்ட வாகறை பிரதேசத்தில் தற்போது நிலவுகின்ற மயான பிரச்சினை போன்ற  சமூக இன நல்லிணக்க செயல்திட்டங்களின்  கலந்துரையாடலாக நடைபெற்றது

இந்நிகழ்வில் இலங்கை சமாதான பேரவையின்  திட்ட இனைப்பாளர் விஜயநாதன் துஷேந்திரா ,மட்டக்களப்பு மாவட்ட  சர்வமத மற்றும் சமாதான குழு தலைவர்கள் , அரச சார்பட்ட நிறுவன  பிரதிநிதிகள்  ,அரச அதிகாரிகள் , சிவில அமைப்புக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்