மட்டக்களப்பில் முதல்முறையாக உயர்தேசிய சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறி ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துச்செல்லும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் உயர்தேசிய சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறி மட்டக்களப்பில் முதன்முறையாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் இந்த புதிய பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் புதிய கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு தாழங்குடா கல்வியியல் கல்லூரியின் மாநாட்டுமண்டபத்தில் நடைபெற்றது.

உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் தலைவர் எம்.ரவி, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது இரண்டாவம் வருட மாணவர்கள் 50பேருக்கு மகாபொல புலமைப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்தன்போது உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா,உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா,உயர்தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவம் ஆகிய பாடநெறிகளுக்கு இந்த ஆண்டு ஆயிரம் மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உள்ளீர்க்கப்பட்ட மாணவர்கள்,பெற்றோர் என இராண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் மேற்கொண்ட அயராத முயற்சியும் சிறப்பாக திட்டமிடலுமே உயர்தேசிய சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறி ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.