கல்வித்தகுதி என்பது வேறு தொழில் தகுதி என்பது வேறு –மட்டு.மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ்

கல்வித்தகுதி என்பது வேறு தொழில் தகுதி என்பது வேறு.கல்வித்தகுதியானது எமது பெயருக்கு பின்னால் அழகுபார்க்கும் பட்டங்களாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை தாழங்குடா கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கல்வி கற்றம் சமூகம் வேலைக்காக போராடிக்கொண்டிருக்கும் சம்பமானது மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்பாக இரண்டு மாதங்களாக பட்டதாரிகள் போராடிக்கொண்டுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் 4500 பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக போராடிவருகின்றனர்.

2012ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் 2500 பட்டதாரிகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டனர்.2012ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டம்பெற்ற பட்டதாரிகள் தங்களுக்கு அரசவேலை வேண்டுமென்று இன்று போராட்டம் நடாத்திவருகின்றனர்.

இது இந்த நாட்டின் உடைய பாரிய பிரச்சினை.நாங்கள் ஆரம்பக்கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையில் இலவச கல்வியைப்பெற்றுக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள்.பட்டம்பெற்றதன் பின்னர் அரசவேலைவாய்ப்பு அதன் பின்னர் ஓய்வூதியம் போன்ற வசதிகளுடன் பல்வேறு வசதிகளை அனுவிக்கின்ற ஒரு நாட்டில் நாங்கள் வசிக்கின்றோம்.நலன்களை வழங்குகின்ற நாட்டில் நாங்கள் இருந்துவருகின்றோம்.

இன்று வேலைவாய்ப்பு பிரச்சினையென்பது பட்டதாரிகளுக்கு மட்டுமல்ல.மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் இரண்டு இலட்சம் பேர் வேலைவாய்ப்பற்றவர்களாகவுள்ளனர். இதில்பெரும்பான்மையானவர்கள் 18வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள்.இவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

நாங்கள் கல்வி தகுதியைப்பெற்றுக்கொண்டதன் முதல் எங்களுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று நடாத்துகின்ற போராட்டங்கள.கல்வித்தகுதி என்பது வேறு தொழில் தகுதி என்பது வேறு.கல்வித்தகுதியானது எமது பெயருக்கு பின்னால் அழகுபார்க்கும் பட்டங்களாகும்.தொழில்கல்வி என்பது தொழிசெய்வதற்கு எங்களை தகுதியுள்ளவர்களாக மாற்றிக்கொள்ளும் விடயமாகும்.இந்த இரண்டுக்கும் வேறுபாடு இல்லாத காரணத்தினால்தான் போராட்டங்களை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுப்பதற்கான காரணமாக அமைகின்றன.

அரச அதிபர்கள் மகாநாட்டில் உயர் கல்வி அமைச்சின் செயலாளர்கள் கலந்துகொள்ளும்போது பல்கலைக்கழகத்தில் இருந்து வேலையை தேடுபவர்களை அனுப்பாதீர்கள்,வேலையை உருவாக்குபவர்களை அனுப்புங்கள் என்று கோரிக்கையினை முன்வைத்தேன்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து 1600க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறுகின்றனர்.இவர்களுக்கு எங்கே வேலைகள் வழங்குவது.நிதியமைச்சின் வரவுசெலவுத்திட்ட அறிக்கையில் 15 பொதுமக்களுக்கு ஒரு அரசாங்க உத்தியோகத்தர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பெறுதல் என்னும் விடயம் பட்டம்பெறுபவர்களுக்கு பாரிய ஒரு சவால்.இது தீர்க்கப்படக்கூடிய சவாலும் அல்ல.எனவேதான் உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பெரும் தொழில் தகைமையானது பட்டம் மட்டுமல்ல தொழில்பெறுவதற்கான தகுதியைம் வழங்குகின்றது.

கல்வி என்பது தனியாக அறிவுக்கு மட்டும் பயன்படுத்தும் விடயமல்ல.அது ஆற்றலையும் வளர்க்கவேண்டும்.அதன்மூலம் தனிமனித ஆற்றல் வளர்க்கப்பட்டு,செயற்பாடுகள் வளர்க்கப்பட்டு நல்ல மனோநிலையில் தொழில் தகைமையுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவேண்டும்.
அமெரிக்காவில் கூட அரச கல்வியென்பது பின்னடைவான ஒன்றாகவே கருதப்படுகின்றது.கல்வி என்பது ஏனைய நாடுகளிலும் இலவசமாக கிடைக்கும் விடயம் அல்ல.

இந்த நாட்டில் மிக வறுமையில் வாடும் ஒருவரின் வரிப்பணத்தில் இருந்தே நாங்கள் கல்வியைப்பெற்றுக்கொள்கின்றோம்.அரச உத்தியோகத்தராகிய பின்னர் அந்த மக்களின் வரிப்பணத்திலேயே ஊதியமும் ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றது.இவற்றையெல்லாம் உணர்ந்தவர்களாக நாட்டில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர்களாக மாறவேண்டும்.